வடகொரியாவில் ஒருவருக்கு கொரோனா..!
வடகொரியாவில் முதல்முறையாக ஓமிக்ரான் வகை கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் கொரொனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியாவில் எந்த வித பாதிப்பும் பதிவு செய்யப்படாமல் இருந்தது.
கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டுக்குள் கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருவதாக வடகொரியா தெரிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது நியூயார்க் நகரில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வடகொரிய தொழிலாளர் கட்சி ஆலோசனை நடத்துவதாகவும், இந்த ஆலோசனையின் பொழுது தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த கிம் ஜாங் உன் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





