தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்..!
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அதில் தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது குறித்து அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுத் தேர்வுகள் முடிந்ததும் மின்வாரிய பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இந்த நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் சுமார் 1300 வினியோகம் மின்மாற்றிகள், 13 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மின் அழுத்த மின் மாற்றிகள் மற்றும் 3 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு தாழ்வழுத்த மின் பாதைகளும் நிறுவப்பட இருப்பதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




