இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு கடல் பகுதியில் நிலவக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கித் திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வட ஆந்திரா, ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




