--- --:--:-- --

நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும்..!

6

கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

கோடை வெயிலில் குழந்தைகளை பள்ளிக்கு வர சொல்வதை கண்டித்தவர் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

கொரொனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ளார். கல்லூரிகளுக்கும் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon