--- --:--:-- --

கல்யாண ஊர்வலத்தில் ஹீட்டுக்கு விரிக்கப்பட்ட பிரம்மாண்ட குடை!

10

ட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் திருமண ஊர்வலத்தில் பிரம்மாண்ட குடைபிடித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸில் தாண்டி பதிவாகி வருகிறது.

 

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க திருமண ஊர்வலத்தில் குடை பிடித்து சென்ற வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட வருகிறது. ஊர்வலத்தில் மணமகன் குதிரையில் அமர்ந்திருக்க உறவினர்கள் ஆடல் பாடலுடன் திருமணத்திற்கு செல்கின்றனர். சாலை மார்க்கமாக செல்லும் அவர்கள் மீது வெப்பம் தெரியாமலிருக்க பிரமாண்ட குடையை அமைத்து அதை நான்கு பேர் பிடித்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon