டெல்லியில் மாநில முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் மாநாடு..!
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் மாநில அமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்கள் முன் வைக்கும் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக 2016ஆம் ஆண்டு நடந்த இந்த மாநாடு சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்த மாநாடு 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் முன்னிலையில் பிரதமர் இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் நீதிமன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்புதல், நீதித்துறை சந்திக்கும் சவால்கள் நீதித்துறை கட்டமைப்புகளை அதிகரித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தேசிய நீதித்துறை கட்டமைப்பு அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பல்வேறு குழுக்களாக முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளும் ஆலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்க உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





