--- --:--:-- --

தடுப்பூசி போடாதவர்களுக்கு எச்சரிக்கை..!

5

கொரொனா பரவலை தடுப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ஐ‌ஐ‌டியில் இதுவரை 171 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

 

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐ‌ஐ‌டியில் மேலும் 26 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

 

இதுவரை 171 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அவர் இன்றுடன் ஐ‌ஐ‌டியில் பரிசோதனை நிறைவடையும் என்று கூறினார். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரொனா பரவல் அதிகரிக்கவில்லை என்றும் மக்கள் மாஸ்க் அணிந்து தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon