கோயில், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் போலீஸார்..!
உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையை அக்ஷய திருதியை பண்டிகையும் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அக்ஷய திருதியை பணிகளின் போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினருக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
கோயில், மசூதிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள மசூதிகள், கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை போலீசார் வேகமாக அகற்றி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





