நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் நடிகை ரைசா..!
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின், தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் நடிகை ரைசா நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரைசா, தற்போது நீருக்கு அடியில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




