மே மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு..!
அதிமுக கட்சி தேர்தல் முழுமையாக முடிவடைந்த நிலையில் மே மாதம் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை தொடர்ந்து அதிமுகவின் கீழ்மட்ட நிலை வரை உள்ள அனைத்து பதவிகளுக்கும் உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பகுதிநேர, நகர பேரூராட்சி மாவட்ட பொறுப்புகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகளை அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக வரும் மே மாதம் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்தையும் முடித்த பிறகு அனைத்து விதமான தகவல்களையும் அதிமுக தேர்தல் ஆணையத்தில் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





