பழங்குடியின பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி சித்ரவதை..!
கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தருமாறு அதிகாரியிடம் புகார் தெரிவித்து பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கனரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது .
பழங்குடியின பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சென்றனர்.
அப்பொழுது அந்த அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் 9 பேர் கொண்ட குழு தடுத்து வெளியேற்றியது. பின்னர் புகார் கொடுத்த பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அந்தப்பெண் மட்டுமின்றி அவரின் சகோதரி தாய் என மூன்று பேரையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படும் நிலையில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





