--- --:--:-- --

7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை..!

1

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத் தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon