தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து கோர விபத்தில் உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை..!
அந்தியூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த திவ்யா பாரதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் குழந்தை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் குழந்தையின் பெரியம்மா உயிரிழந்தார்.
குழந்தையின் தந்தை, பாட்டி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமின்றி குழந்தை உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





