--- --:--:-- --

குப்பைக்கிடங்கில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!

8

கோவையில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்த பெண் மீது குப்பைகள் கொட்டப்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் குப்பைகளை ஏற்றி வந்த டிப்பர் லாரி அந்த சிவகாமி என்ற பெண்மீது குப்பைகளை கொடியதாக கூறப்படுகிறது. சக ஊழியர்கள் குப்பைக்குள் இருந்த பெண்ணை மீட்க முயற்சித்துள்ளனர். அந்த பெண் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon