தேநீர் கடைக்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பு..!
தேனீர் கடையில் நுழைந்த கட்டுவிரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தேநீர் கடையை திறந்து வழக்கம் போல பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்.
சர்க்கரை, டீதூள், காய்கறிகளை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்து போது அதற்குள் நான்கு அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு மறைந்து இருந்துள்ளது.
இதைப் பார்த்து பதறிய ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





