இளைஞருக்கு ஆட்டுடன் திருமணம்…தோஷம் கழிப்பு..!
ஆந்திராவில் தோஷம் கழிப்பதற்காக இளைஞர் ஒருவருக்கு ஆட்டுடன் திருமணம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரமேஷிற்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலத்தை உறவினர்கள் தொடங்கினார்கள்.
ஜாதகத்தில் ரமேஷுக்கு தார தோஷம் இருப்பதாகவும் எனவே அவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெறும் என்றும் அவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் கூறியிருக்கிறார்கள். எனவே ரமேஷிற்கு ஆடு ஒன்றுடன் கோயிலில் வைத்து திருமணம் நடக்க வேண்டும் என்றும் பின்னர் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜாதகத்தை பார்த்தவர்கள் கூறினார்கள்.
இதனால் ரமேஷுக்கும் ஆடுக்கும் திருமணம் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டது. தெலுங்கு புத்தாண்டு தினத்தன்று நவகிரக கோவில்களில் திருமணம் செய்து தார தோஷ பரிகாரம் செய்து கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





