ராகிங் என்ற பெயரில் முட்டி போடவைத்து சரமாரியாகத் தாக்கிய கொடூரம்..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் இரண்டாமாண்டு மாணவனை முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கிய சீனியர் மாணவர் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தவர்கள் இரவு பதினொரு மணிக்கு ஜூனியர் மாணவர்களை முட்டி போட வைத்து செல்போன், சார்ஜர், செருப்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு அலைபேசி மூலம் புகார் அளித்ததை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




