திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நிலநடுக்கம் பொதுமக்கள் பீதி..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு உணரப்பட்டது. அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திர வட்டத்திற்குட்பட்ட கீரனூர் பகுதியில் அதிகாலை 2 மணி முதல் நில அதிர்வு உணரப்பட்டது என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று சாலை ஓரங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் அச்சத்துடன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக சென்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




