--- --:--:-- --

பெண்கள் பள்ளிகளுக்கான தடை நீட்டிப்பு..!

8

ப்கானிஸ்தானில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் திறப்பதற்கு தொடரும் தடைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆப்கான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.

 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்ற பொழுது தொற்றுநோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

இதனை தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி தலைநகர் காபூலில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon