--- --:--:-- --

சைக்கிளில் சாலையை கடக்க முயன்று பைக் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுவன்..!

4

கேரளாவில் சாலையை அதிவேகமாக கடக்க முயன்ற சிறுவன் பேருந்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் சாலையை கடக்க முயலும்போது பைக் மீது மோதினார்.

 

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு பின்னால் வந்த பேருந்தில் சிக்காமல் உயிர் தப்பினார். பேருந்தில் சிக்கிய அவனது சைக்கிள் சுக்குநூறாக மாறிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon