சர்ச்சையை தொடர்ந்து நடிகை சமந்தா பதிவிட்ட தத்துவ புகைப்படம் !
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், மிகவும் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகிறது, மேலும் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே நட்சத்திர தம்பதிகளாக இருந்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவித்தது பெரியளவில் பேசப்பட்டது. அதன்பின் இன்ஸ்டாவில் கூட சமந்தா அவரின் முன்னாள் கணவருடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார். அப்படி இருக்கையில் தற்போது இன்ஸ்டாவில் நாக சைதன்யா Unfollow செய்துள்ளார் சமந்தா.
மேலும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விஷயத்தை தொடர்ந்து சமந்தா அவரின் ஸ்டோரிஸ் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




