சீன அதிபருக்கு ஜோபைடன் எச்சரிக்கை..!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா சீனா கூட்டு ஒத்துழைப்புக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங்க் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் , அமெரிக்க அதிபர் இருவரும் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது பேசிய சீன அதிபர் உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். உலகம் அமைதியாக நிலையானதாக இல்லை என்றும் தற்போது நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது எனவும் குறிப்பிட்டார்.
போர்க்களத்தில் சந்திக்கும் நிலை நாட்டுக்கு வரக்கூடாது என்பதே முக்கிய நிகழ்வுகள் காட்டுவதாகவும் சீனஅதிபர் கூறியுள்ளார். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவுகளை கருத்தில் கொண்டு ரஷ்யாவின் படையெடுப்பை சீனா கண்டிக்கவில்லை என்று அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் சீன அதிபரின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதுடன் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா தயங்காது என்பதையும் அதிபர் ஜோ பைடன் செயல்படுத்த உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





