நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, 19-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




