--- --:--:-- --

சாதி மத அரசியலை மக்கள் குழிதோண்டி புதைத்துவிட்டனர்..!

4

ஜாதி மத அரசியலை மக்கள் குழிதோண்டி புதைத்து விட்டதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். லக்னோவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

 

அப்போது பேசிய அவர் பிரதமர் மோடியின் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை மக்கள் அங்கீகரித்து கொள்வதாக தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் ஜாதி மத அரசியலை மக்கள் குழிதோண்டிப் புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

 

பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு பாதுகாப்பான உதவிகளை கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து உழைக்கும் என்றும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon