--- --:--:-- --

தந்தையை எரித்து கொல்ல முயன்ற மகன்..!

5

திருச்சியில் சொத்தை பிரித்து தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டான். வெற்றிவேல் என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவரது மூத்த மகன் சென்னையில் இருந்து வந்துள்ளார்.

 

அப்பொழுது சொத்தை பிரித்து தருமாறு அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் தந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதனையடுத்து முத்துவேல் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது மூத்த மகன் சாந்தகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்ற மகனே தந்தை மீது பெட்ரோலை ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon