--- --:--:-- --

குழந்தை பாலினத்தை தெரிவித்த 2 பேர் கைது..!

8

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து பணம் பறித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அதிராம் பட்டி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வருவதாக புகார் வந்தது.

 

இதற்கு எதிராக சென்னை சுகாதாரத் துறை கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வு திருப்பத்தூர் அடுத்த தரகம்பட்டியில் காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து கண்டுபிடிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக சுகுமார் மற்றும் பெண் இருவரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவரிடமிருந்து ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon