--- --:--:-- --

உ.பி.யில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை..!

1

2017 ஆம் ஆண்டு தேர்தலில் 384 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் வென்றன. பாரதிய ஜனதா இந்த முறை பல தொகுதிகளை இழக்கக்கூடும் என்ற போதிலும் அந்தக் கட்சி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

2017 முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்த பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை வாரி வழங்கினார். பாரதிய ஜனதாவுக்கு கடும் சவாலாக திகழ்ந்த சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

 

2017ல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 311 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் மட்டுமே வென்றது. தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை சுமார் 170 தொகுதிகளில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கட்சிக்கு ஏறக்குறைய 75 தொகுதிகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 

கடந்த 20 ஆண்டுகளாக உத்தரப் பிரதேச தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்று ஒரு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 19 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த முறை அதற்கும் குறைவான தொகுதிகள் தான் அந்த கட்சிக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon