அரை நிர்வாணமாக கலாட்டா செய்த நபர்..!
சேலத்தில் ஓடும் பேருந்தில் மேலேறிய நபர் அரை நிர்வாணத்தில் அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் தியாகிகள் நினைவு தூணில் தியானம் செய்வதுபோல் கலாட்டா செய்தவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இரவு 10 மணி அளவில் இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் காவலில் இருந்த போலீசார் தடுத்து மேல்சட்டையை கழற்றி சாலையில் வீசிவிட்டு பேருந்தின் மீது ஏறிய இளைஞர் கலாட்டா செய்ததாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞன் தன்னை தாக்கியதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. இளைஞரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





