சொந்தக் கார் வைத்திருப்போர் இனி மாஸ்க் போட வேண்டிய அவசியமில்லை..!
டெல்லியில் சொந்தக் கார் வைத்திருப்போர் தங்களது வாகனங்களில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வாடகை கார்கள், டாக்சிகள் மற்றும் வாடகை வாகனங்களில் பயணம் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாளை முதல் அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய மறுப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





