--- --:--:-- --

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மட் கட்டாயம்..!

3

4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றால் அவர்கள் ஹெல்மட் அணிந்து இருக்கவேண்டுமென ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோட்டார் வாகனச் சட்டம் 1989 இல் உள்ள 138 ஐ அரசு திருத்தம் செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி நான்கு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் எனவும் இரு சக்கர வாகனத்தை அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து அமலுக்கு வரும் எனவும் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon