--- --:--:-- --

இளைஞர் பெருமன்றம் மக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டம்..!

9

த்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும் புதுச்சேரிக்கு என்று தனி நிதி ஒதுக்கப்படவில்லை.

 

அதேபோல் வேலைவாய்ப்பு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பதால் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்டித்து புதுச்சேரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பி அவர்கள் சிக்னலில் இருந்த பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon