--- --:--:-- --

ஓட்டுநர் தாக்கியதில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

11

பேருந்தை தாமதமாக இயக்கியது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை ஓட்டுநர் தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முருகன் என்பவர் பாரிமுனை செல்வதற்காக கணவருடன் அதிகாலை பேருந்து பணிமனைகள் சென்றுள்ளார்.

 

பேருந்து ஓட்டுனர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த ஓட்டுனர் அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அங்கேயே மயங்கி விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 60க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon