தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று வட வட தமிழக கடலோர மாவட்டங்கள் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்ட பகுதிகளில் லேசான மழை பொழியும் என்றும், 29, 30 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 31ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





