10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்..!
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்வது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபடக் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மகேஷ் சம்பவம் நடந்ததா என்பது குறித்து முன்னாள் மாணவர்களின் கருத்து கேட்க இருப்பதாகவும் கூறினார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் நடத்தப்படும் எனவும் பொதுத் தேர்வு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தான் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





