--- --:--:-- --

டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவேண்டும் : இ‌பி‌எஸ்

9

கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அதிமுக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரொனா வேகமாக பரவி வருகிறது என்று தெரிவித்தார். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து இருப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல் என குற்றம்சாட்டியுள்ளார்.

 

எனவே, கொரொனா பரவாமல் இருக்க அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்று எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon