தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





