--- --:--:-- --

உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது எனக்கூறி தற்கொலை செய்த மாணவன்.!

9

திருவள்ளூர் அருகே ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட கல்லூரி மாணவனின் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் அரக்கோணம் அடுத்த ராணிப்பேட்டை பேட்டைத்தை சேர்ந்தவர் இவர். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் புறநகர் ரயிலில் தன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

 

அப்போது திருநின்றவூர் அருகே சென்றபோது சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் குமாரை ரயிலில் இருந்து கீழே அழைத்து சென்றுள்ளனர்.

 

குமார் தன் நண்பர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் போடும் உயிர் பிச்சையில் வாழ முடியாது என்றும் அதனால் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

பின்னர் ரயில் முன் பாய்ந்து குமார் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிகிறது. கல்லூரி அடையாள அட்டையை வைத்து உயிரிழந்தது குமார் தான் என்பதை போலீசார் உறுதி செய்ததோடு சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதேநேரம் குமாரின் நண்பர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon