ஆப்கனில் உணவின்றி தவிக்கும் மக்கள்…!
ஆப்கானிஸ்தானில் பணமதிப்பிழப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் உதவும் பழக்கத்தை நிறுத்தி உள்ளன. மேலும் விலைவாசி அதிகமானதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற மாநாடொன்றில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு அமைப்பினர் கிட்டத்தட்ட 98 விழுக்காடு மக்கள் அன்றாட உணவு இன்றி, தவித்து வருவதாகவும் அதோடு இந்த ஆண்டின் தற்போது வரை சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேருக்கு உலக உணவு திட்ட அமைப்பின் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





