திடீரென்று பள்ளிக்கூடத்திற்குள் பரவிய தேனீக்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மரத்தில் இருந்து திடீரென்று பரவிய தேனீக்கள் அங்கிருந்த 20 மாணவர்களை கொட்டியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தேண்கொட்டிய மாணவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






