--- --:--:-- --

பிரிட்டனில் அதி வேகமாக பரவும் ஒமைக்ரான்..!

6

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் எழுபத்தி எட்டாயிரத்தை கடந்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் 68,053 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அதைவிட கூடுதலாக ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

அதேபோல் பிரிட்டனில் ஒரு சில பகுதிகளில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தலைமை சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon