மராட்டிய மாநிலத்தின் முதல் ஒமிக்ரான் நோயாளி குணமடைந்தார்..!
மராட்டிய மாநிலத்தில் முதல் ஓமைக்ரான் நோயாளி குணமடைந்து பிறந்தநாளன்று வீடு திரும்பியுள்ளார். ஓமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தொடங்கியுள்ள ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் இருந்து துபாய் வழியாக மும்பைக்கு சென்ற 34 வயதான பயணி ஒருவருக்கு ஓமைக்ரான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தனது பிறந்த நாளான நேற்று அவர் வீடு திரும்பியுள்ளார். இதனால் மராட்டியத்தின் முதல் நோயாளி குணம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






