--- --:--:-- --

டெல்லி கொண்டு செல்லப்படும் கறுப்பு பெட்டி..!

2

குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த இடம் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு கருப்பு பெட்டி தேடும்பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது.

 

சுமார் 20 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டியை டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்ப குழு கண்டுபிடித்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த பெட்டி கிடைத்துள்ளது.

 

விபத்தின் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது அந்த கறுப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும். அதை வைத்து ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படும். ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டியை டெல்லி கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon