--- --:--:-- --

இளைஞர் தொண்டையில் உணவு சிக்கி இருந்ததாக தகவல் தெரிவித்துள்ள ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..!

10

இளைஞர் மணிகண்டன் உயிரிழந்த சம்பவத்தில் போலீசாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 

கார்த்திக்கின் செல்போனில் அரிவாள் உள்ளிட்ட படங்கள் இருந்ததால் அது குறித்து விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும் அவரின் தாய் முன்பாகவே ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

 

மணிகண்டனை எச்சரித்து அனுப்பிய வைத்துதாகவும் ஐந்து மணி நேரத்திற்கு பிறகே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுரையீரலில் ரத்த கசிவு மற்றும் தொண்டையில் உணவு சிக்கிய இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon