--- --:--:-- --

வட மாநிலங்களில் தான் காலாவதி தடுப்பூசி உள்ளது..!

3

தமிழ்நாட்டில் தனியாரிடம் பெரிய அளவில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை எனவும் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாகவும் வெளியான செய்தி வட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையிலுள்ள ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் டெங்குவிற்கு இதுவரை 4 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் தனியாரிடம் பெரியளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை எனவும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 23 லட்சத்து 83 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டதில் 27 லட்சத்து 19 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

 

தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக வெளியான செய்தி வட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எனக்கூறி கொரொனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

 

11 புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1500 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon