--- --:--:-- --

திருமணமான ஒரே ஆண்டில் பெண் மரணமடைந்ததால் பெண் வீட்டார் புகார்..!

10

திருமணமான ஒரே ஆண்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தலைமறைவாக உள்ள கணவரின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் இரண்டு தினங்களுக்கு முன் அபிதா என்ற 23 வயது பெண் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை ஆறு மாத காலமாக வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த அபிதாவின் கணவர் தட்சிணாமூர்த்தி கொலை செய்துவிட்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதனால் தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

தந்தை ஆறுமுகம், சகோதரிகள் முத்துலட்சுமி ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். தட்சிணாமூர்த்தியின் சகோதரர் முருகனை கைது செய்ய வலியுறுத்தி சென்ற காவல் நிலையம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon