பதவி ஏற்பு விழாவில் நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்த முன்னாள் எம்எல்ஏ..!
புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் திடீரென மயங்கி விழுந்த முன்னாள் எம்எல்ஏவும், மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சுருண்டு கீழே விழுந்த பரசுராமன் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






