--- --:--:-- --

தந்தை பணம் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை..!

4

தெலுங்கானாவில் தந்தை பணம் கொடுக்காததால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாய்குமார் என்ற மாணவன் கல்லூரியில் பணிபுரியும் நபரின் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றபோது விபத்தில் பைக் சேதமடைந்ததோடு சாலையில் சென்ற இரண்டு பேரும் காயமடைந்தனர்.

 

காயமடைந்த இருவரும் சாய்குமாரை அந்த கல்லூரிக்கு அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தனது தந்தைக்கு போன் செய்த சாய்குமார் நடந்த சம்பவங்களை கூறி பைக்கை சரிசெய்யவும் காயமடைந்த இளைஞர்களுக்கு சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 

ஆனால் தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் செய்வதறியாமல் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

சாய்குமார் ஓடிச்சென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon