திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு உடல்நலக்குறைவு..!
திராவிட கழகத் தலைவர் கி வீரமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. அவர் பூரண நலம் பெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கணியன் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.






