மாரியப்பனுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்..!
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு அரசு வேலைக்கான ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் கலந்து கொண்டார்.
அவர் உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த போது அரசு வேலை வழங்க முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசு செய்தித்தாள் நிறுவனத்தில் துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.






