--- --:--:-- --

நான்கு மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

1

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

 

குமரி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon